Last Updated:

வாரத்திற்கு எண்ணற்ற மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால் நீங்கள் தேர்வு செய்வதற்கான மொபைல் ஆப்ஷன்கள் கடல் போல உள்ளது.

News18

குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் நீங்கள் புதிதாக ஸ்மார்ட் ஃபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு மிகவும் பொருத்தமான டிவைஸை கண்டறிவது எளிதானது அல்ல. மேலும் வாரத்திற்கு எண்ணற்ற மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால் நீங்கள் தேர்வு செய்வதற்கான மொபைல் ஆப்ஷன்கள் கடல் போல உள்ளது.

இந்த டிசம்பரில் ரூ.35,000-க்கு கீழ் நீங்கள் கிடைக்க கூடிய சிறந்த 5G மொபைல்களின் பட்டியல் இங்கே.

விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G):

சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் ஈர்க்க கூடிய அம்சங்களுடன் கிடைக்கும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோனாக விவோவின் T3 Ultra 5G மொபைல் இருக்கிறது. 192 கிராம் எடையுள்ள இந்த மொபைல் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைலில் MediaTek Dimensity 9200+ ப்ராசஸர் உள்ளது, இது ஸ்மூத்தான மல்டி டாஸ்கிங் மற்றும் சிறந்த கேமிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது. இதில் 6.78-இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் நல்ல அவுட்டோர் விசிபிலிட்டியை கொண்டுள்ளது. இந்த மொபைலின் கேமரா சிஸ்டம் 50MP Sony IMX921 பிரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தோற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்T3 அல்ட்ரா சிறந்த ஸ்மார்ட் போன்களில் ஒன்றாகும்.

ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G):

ரூ.35,000-க்கும் குறைவான ஸ்மார்ட் ஃபோன் செக்மென்ட்டில் இது ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. இந்த மொபைலில் Snapdragon 7+ Gen 3 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. Nord 4 மொபைலானது 6.74-இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெஃபரஷ் ரேட்டை கொண்டுள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மொபைலுக்கு 6 வருட சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்களை வழங்குகிறது. ரூ.29,999 விலையில் கிடைக்கும் OnePlus Nord 4 5G-ஆனது ஒரு ஆல்ரவுண்ட் விருப்பமாகும்.

ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G):

இந்த மொபைல் நல்ல செயல்திறன் மற்றும் சிறந்த அம்சங்களின் கலவையாக உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord 4 மொபைலை போலவே, இந்த ஃபோனும் Snapdragon 7+ Gen 3 ப்ராசஸரில் இயங்குகிறது. 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உள்ளது, இது உங்கள் எல்லா ஆப்ஸ் மற்றும் டேட்டாவிற்கான நிறைய ஸ்டோரேஜை அளிக்கும்.120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. கேமிங் அல்லது வீடியோக்களைப் பார்த்தாலும் சாஃப்ட் ஸ்க்ரோலிங் மற்றும் சிறந்த காட்சிகளை உறுதி செய்கிறது. இந்த ஃபோனில் OIS சப்போர்ட்டுடன் கூடிய 50MP பிரைமரி கேமரா உள்ளது, இது குறைந்த வெளிச்சத்திலும் நல்ல ஃபோட்டோக்களை எடுக்க உதவுகிறது.120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி இதில் உள்ளது.

போகோ எஃப்6 5ஜி (Poco F6 5G):

பணத்திற்கு ஈர்க்க கூடிய மதிப்பை இந்த மொபைல் வழங்குகிறது. இந்த மொபைல் Snapdragon 8s Gen 3 ப்ராசஸரில் இயங்குகிறது, இது கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு சிறந்தது. இந்த டிவைஸில் கொடுக்கப்பட்டிருக்கும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.67-இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே மென்மையான மற்றும் அதிவேகமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. இதில் OIS சப்போர்ட்டுடன் இருக்க கூடிய 50MP பிரைமரி கேமரா அருமையான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. ஆனால் மேற்கண்ட மற்ற 3 மொபைல்களை விட Poco F6 மொபைலானது ஒப்பீட்டளவில் சிறிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைல் 90W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.



Source link