ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள் வீடு தேடி சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிறுவனங்களில் செப்டோ நிறுவனமும் ஒன்று. இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ள 21 வயதான கைவல்யா வோஹ்ரா, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர், பிரபல விரைவு வர்த்தக நிறுவனமான செப்டோவின் நிறுவனர் ஆவார். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இளையவர் ஆன இவரின் சொத்து மதிப்பானது ஹுருன் இந்தியா அறிக்கையின்படி தற்போது ரூ.3600 கோடிகள் ஆகும். இந்தப் பட்டியலில் கைவல்யா முதலிடத்திலும், ஜெப்டோவின் இணை நிறுவனர் ஆதித் பாலிச்சா (22) அடுத்த இடத்திலும் உள்ளார்.
அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு மே மாதத்தில், செப்டோ-வின் மன்த்லி கேஷ் பர்ன் ஆனது ரூ.35-40 கோடி இருந்தது, கடந்த 3 மாதங்களில் நிறுவனம் செயல்பாடுகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற காணங்களால், இது 6 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.250-300 கோடியாக உள்ளது. கைவல்யா வோஹ்ரா முதன்முறையாக ஹுருன் பணக்காரர் பட்டியலில் 2022 இல் இடம்பிடித்துள்ளார் அப்போது அவருக்கு 19 வயதுதான். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். மேலும் அவர் ஃபோர்ப்ஸ் இதழின் செல்வாக்குமிக்க 30 வயதுக்குட்பட்ட 30 ஆசியா பட்டியலிலும் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைவல்யா வோஹ்ரா கர்நாடக மாநிலத்தில் 2003-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி பிறந்த வோஹ்ரா, பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ப்ரஷ்ட்டிஜியஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ரோக்ராம்மில் கலந்து கொள்வதற்கு முன்பு, மும்பையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தார். இருப்பினும், கைவல்யாவும், ஆதித் பாலிச்சாவும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி செப்டோ நிறுவனத்தை தொடங்கினர்.
ஆன்லைன் ஆர்டர்களுக்கான நீண்ட டெலிவரி நேரங்களால் விரக்தியடைந்த கல்லூரி மாணவராக இருந்த கைவல்யா வோஹ்ராவிற்கு செப்டோ பற்றிய யோசனை வந்தது. 2021 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது டெலிவரிக்கான தேவை அதிகரித்தது. இந்நிலையில் சில மணி நேரங்களுக்குள் மளிகைப் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, கைவல்யா வோஹ்ரா மற்றும் அவரின் நண்பர் ஆதித் பாலிச்சா இருவரும் சேர்ந்து மும்பையில் செப்டோ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக கைவல்யாவும், ஆதித் பாலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார்.
மும்பையில் 1,000 ஊழியர்கள் மற்றும் டெலிவரி முகவர்களுடன் தொடங்கிய இந்நிறுவனம், ஆன்லைன் விநியோகங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் செப்டோ நிறுவனம் மேலும் வளர பல லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டிற்குள் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டும் இலக்கை சமீபத்தில் அறிவித்தது மற்றும் மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 120 கஃபேக்களுடன் கஃபே சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
.