இந்த மொபைலின் பேஸ் வேரியன்ட் (12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்) விலை ரூ 54,999-ல் தொடங்குகிறது. இந்த மொபைல் மேற்கண்ட துவக்க விலையில் கிடைத்தாலும்கூட வாங்குவோருக்கு பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது. ஆனால், தற்போது இந்த மொபைலை ரூ.40,000க்குள் வாங்க ஒரு வழி இருக்கிறது. இதற்கு காரணமாக சில தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இருக்கின்றன.
ரூ.40,000-க்கு கீழ் iQOO 13 மொபைலை வாங்குவது எப்படி?
இந்த மொபைல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பிளாட்ஃபார்ம்களில் வாங்கக் கிடைக்கிறது. இந்த மொபைலின் பேஸ் மாடல் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் கொண்டது, டாப்-என்ட் வேரியன்ட் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் கொண்டது. இவற்றின் விலைகள் முறையே ரூ.54,999 மற்றும் ரூ59,999 ஆகும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபேங்க் கார்டை பயன்படுத்தினால் ரூ.2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெறலாம். இதன் மூலம் விலைகள் முறையே ரூ.52,999 மற்றும் ரூ.57,999-ஆக குறையும்.
இது தவிர உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனின் கண்டிஷன் மற்றும் மார்க்கெட் வேல்யூவை பொறுத்து அமேசானில் ரூ.32,500 வரை மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, நீங்கள் இரண்டு வருடம் பழைய மாடலான iQOO 11 மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.14,500 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் பேஸ் வேரியன்ட் விலையை ரூ.38,499ஆக குறையும். அதே நேரம் ஹை-என்ட் வேரியன்ட் விலை ரூ.43,499-ஆக குறையும். உங்கள் டிவைஸிற்கான சரியான எக்ஸ்சேஞ்ச் மதிப்பை சரிபார்க்க, Amazon-க்கு சென்று நீங்கள் விரும்பும் iQOO 13 வேரியன்ட்டை தேர்ந்தெடுத்து, உங்கள் தற்போதைய மொபைலின் விவரங்களை என்டர் செய்யவும். உங்கள் எக்ஸ்சேஞ்ச் அதிகபட்ச மதிப்புக்கு தகுதி பெற்றால், மிகச் சிறந்த டீலைப் பெறுவீர்கள்.
சிறந்த டீலில் கிடைக்கும் iQOO 13-ஐ வாங்கலாமா?
இந்த மொபைல் ரூ 60,000 பட்ஜெட் செக்மென்ட்டில் ஒரு தனித்துவமானது. செயல்திறன், வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் சிறப்பான கலவையைக் கொண்டுள்ளது. லேட்டஸ்ட் ப்ராசஸரான Snapdragon 8 Elite இதிலுள்ளது. இந்த சிப்செட் 16GB ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இது கேமிங், மல்டிடாஸ்கிங் எல்லாவற்றையும் எளிதில் கையாள உதவும்.
இதையும் படிக்க: எச்சரிக்கை…! வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்தினால் நீங்கள் சிக்கலில் மாட்டலாம்…
இதில் 44Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ், HDR10+ சப்போர்ட் கொண்ட 6.82 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. iQOO 13 மொபைலில் சோனி IMX921 பிரைமரி சென்சார் உட்பட ட்ரிபிள் 50MP சென்சார்கள் கொண்ட டிரிபிள் கேமரா சிஸ்டமைக் கொண்டுள்ளது. இந்த கேமரா சிஸ்டம் 8K வீடியோக்கள் வரையிலான ரெக்கார்டிங் திறன் கொண்டது.
மேலும் 32MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. iQOO 13-வில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6,000mAh பேட்டரி பேக் உள்ளது. சுமார் 30 நிமிடங்களில் 0-விலிருந்து முழு சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த மொபைலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்-பிரின்ட் ஸ்கேனர், Wi-Fi 7, ப்ளூடூத் 5.4 மற்றும் IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.
இதையும் படிக்க: Yuva Smart: புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ள லாவா நிறுவனம்!
அம்சங்கள் நிரம்பிய இந்த ஃபிளாக்ஷிப்பை iQOO நிறுவனம் எவ்வாறு குறைந்த விலையில் கொடுக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். பிரீமியம் விலையின்றி உயர்மட்ட விவரக் குறிப்புகள் அடங்கிய டிவைஸ்களை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துவதே இந்த விலை நிர்ணய உத்தி ஆகும். iQOO 13ல் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகள் வழங்கும் விரிவான extensive ecosystem இல்லாவிட்டாலும், இதன் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றுடன் இந்த டிவைஸை ஈடு செய்கிறது.
January 29, 2025 2:45 PM IST