பெரும்பாலானோர் தியேட்டர் போன்ற அனுபவத்தைப் பெறும்வகையில், தங்களது வசதிக்கேற்ப, பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில், ரூ.50,000க்கும் குறைவான விலையில், 55 இன்ச்சில் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஒரு ஸ்மார்ட் டிவியானது, டிஸ்ப்ளே குவாலிட்டி, கனெக்ட்டிவிட்டி விருப்பங்கள், மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அனுபவம், தடையற்ற இணைப்பு உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதில், முன்னணி நிறுவனங்களான சாம்சங், சோனி, சியோமி, எல்ஜி மற்றும் பானாசோனிக் போன்ற பல டிவி பிராண்டுகள் இந்த விலையில் கவர்ச்சிகரமான விருப்பங்களை வழங்குகின்றன. இவை மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் விதமாக அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான அம்சங்களுடன் வருகின்றன. அந்த வகையில், ரூ.50,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் சில மாடல்களைப் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

சாம்சங் டி தொடர் 55-இன்ச் கிரிஸ்டல் 4K விவிட் (2024 எடிஷன்)

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட் டிவியானது 138 செ.மீ. (55 இன்ச்சில்) ரூ.45,990 விலைக்கு கிடைக்கிறது. மிகவும் நேர்த்தியான ஏர் ஸ்லிம் வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவி, 20 வாட் க்யூ-சிம்போனி ஸ்பீக்கர்களால் இயக்கப்படுகிறது. மேலும், இதன் டிஸ்ப்ளேயில் கூடுதலாக, மோஷன் எக்ஸ்செலரேட்டர், 4K அப்ஸ்கேலிங் மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

எல்ஜி யுஆர்7500 55-இன்ச் அல்ட்ரா எச்டி (4K) வெப்ஓஎஸ் எல்இடி ஸ்மார்ட் டிவி (2024 எடிஷன்)

எல்ஜி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவியானது 139 செ.மீ. (55 இன்ச்சில்) ரூ.43,990க்கு விற்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் ஓடிடி ஆப் சப்போர்ட் வழங்கப்படுகின்றன. இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, ஜியோ சினிமா, சோனி லைவ், டிஸ்கவரி+, ஜி5, வூட், எம்எக்ஸ் பிளேயர், கூகுள் பிளே மூவிஸ் & டிவி, யுப் டிவி மற்றும் யூடியூப் ஆகியவை அடங்கும். இதன் டிஸ்ப்ளேவில் கேம் ஆப்டிமைசர், ஃபிலிம்மேக்கர் மோட், α5 ஏஐ ப்ராசசர் 4K ஜென்6 போன்ற அம்சங்கள் உள்ளன.

டிசிஎல் சி69பி 55-இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி (55C69B)(4K) கூகிள் டிவி (2024 எடிஷன்)

டிசிஎல்-ன் இந்த 139 செ.மீ (55 இன்ச்) ஸ்மார்ட் டிவியானது ரூ.37,990க்கு கிடைக்கிறது. மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவியில், கூடுதலாக 35 வாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. டிஸ்ப்ளேவில் கூகுள் டிவி, டால்பி விஷன் -அட்மாஸ், எச்டிஆர் 10+, AiPQ ப்ரோ ப்ராசசர், டி-ஸ்கிரீன்-ப்ரோ (T-SCREEN- PRO) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கனெக்ட்டிவிட்டியைப் பொறுத்த வரையில், இதில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் இருக்கும்.

பேனாசோனிக் டிஎச் -55MX660DX 55-இன்ச் அல்ட்ரா எச்டி (4K) எல்இடி கூகிள் டிவி (2024 எடிஷன்)

பேனாசோனிக் 139 செ.மீ. (55 இன்ச்) ஸ்மார்ட் டிவியானது ரூ.42,990 விலையில் கிடைக்கிறது. மெலிதான பெசல் வடிவமைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில் 4k ஸ்டுடியோ கலர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக இந்த டிவி 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிஸ்ப்ளேவில் வைட் விவ் ஆங்கிள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தடையற்ற கனெக்ட்டிவிட்டி விரும்பபங்களுடன், கூகுள் டிவி, வாய்ஸ் சர்ச் மற்றும் இன்பில்டு குரோம்கேஸ்ட் உள்ளிட்ட ஸ்மார்ட் அம்சங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதையும் படிக்க: பேட் 6 யூசர்களின் கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவில் பேட் 7ஐ அறிமுகப்படுத்திய சியோமி…!

ஹையர் L55EG 55-இன்ச் அல்ட்ரா எச்டி (4K) எல்இடி ஸ்மார்ட் கூகிள் டிவி (2024 எடிஷன்)

ஹையர் நிறுவனத்தின் 140 செ.மீ. (55 இன்ச்) எல்இடி ஸ்மார்ட் டிவியானது ரூ.41,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் மேம்பாட்ட டிஸ்ப்ளேவுக்காக டால்பி விஷன், மேம்பட்ட வாய்ஸ்க்காக டால்பி அட்மாஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக இந்த டிவி 20 வாட் ஸ்பீக்கர்களால் இயக்கப்படுகிறது. மேலும் இதன், டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வைட் விவ் ஆங்கிள், கூகிள் டிவி, வாட்ச்லிஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகிள் பிளே, குரோம்கேஸ்ட் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், இதில் 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் இடம்பெற்றுள்ளன.

சியோமி L55MA-SIN X Pro 55-இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி (4K) ஸ்மார்ட் கூகிள் டிவி (2024 எடிஷன்)

சியோமியின் 138 செ.மீ. (55 இன்ச்) கொண்ட க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவியானது ரூ.47,999க்கு கிடைக்கிறது. மேலும், இந்த டிவியானது 30 வாட் ஸ்பீக்கர்களால் இயக்கப்படுகிறது. டிஸ்ப்ளேவில் என்யூஎல்இடி தொழில்நுட்பம் மற்றும் விவிட் பிக்சர் எஞ்சின் 2 போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஜி5 மற்றும் பல உள்ளமைக்கப்பட்ட ஆப்கள் உள்ளன. கூடுதலாக, ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: ரியல்மி குடியரசு தின விற்பனை: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போன்களின் லிஸ்ட் இதோ…!

தோஷிபா M650MP அல்ட்ரா எச்டி (4K) எல்இடி ஸ்மார்ட் விஐடிஏஏ டிவி (2024 எடிஷன்)

தோஷிபாவின் 139 செ.மீ. (55 இன்ச்) எல்இடி ஸ்மார்ட் டிவி ரூ.43,999 விலைக்கு விற்கப்படுகிறது. கூடுதலாக இந்த டிவி, பிரிவின் மிகவும் சக்திவாய்ந்த 45 வாட் ஸ்பீக்கர்களால் இயக்கப்படுகிறது. டிஸ்ப்ளேவைப் பொறுத்த வரையில், விஐடிஏஏ யூ6 ஓஎஸ் (VIDAA U6 OS), எச்டிஆர் சிஸ்டம் (எச்டிஆர் / எச்டிஆர்10 / எச்டிஆர்10+ / டால்பி விஷன்), குரோம்கேஸ்ட், மிராகேஸ்ட், டிஎல்என்ஏ, விஆர்ஆர்-க்கான ஆட்டோ லோ லேட்டன்சி மோட் மற்றும் லைட் சென்சிங் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட காட்சி அமைப்புக்காக டால்பி விஷன் மற்றும் மேம்பட்ட குரல் தரத்திற்காக டால்பி அட்மாஸ் போன்ற சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: இந்தியாவில் OnePlus 13 சீரிஸ் அறிமுகம்… விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளே…! 

வியு 55VIBE24 அல்ட்ரா எச்டி (4K) வைப் சீரிஸ் எல்இடி ஸ்மார்ட் கூகிள் டிவி (2024 எடிஷன்)

வியு நிறுவனத்தின் இந்த 139 செ.மீ. (55 இன்ச்) 108 செ.மீ. எல்இடி ஸ்மார்ட் டிவி ரூ.43,999 விலையில் கிடைக்கிறது. இதில் கூடுதலாக, ஒருங்கிணைந்த சவுண்ட் பார் இருப்பதால் 88 வாட் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. டிஸ்ப்ளேவில் 4K குவாண்டம் டாட் டெக்னாலஜி, எச்டிஆர்10+, எச்டிஆர்10 & எச்எல்ஜி, டைனமிக் பேக்லைட் கண்ட்ரோல், கிரிக்கெட் மோட், சினிமா மோட், ஏஐ பிக்சர் எஞ்சின் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.



Source link