இந்த பிளானைப் பற்றிய முழு விவரங்களை இப்போது பார்ப்போம்!

அன்லிமிடெட் 5ஜி சேவையை நீங்கள் அனுபவிக்க வேண்டுமெனில், உங்களது ஃபோனில் ஏற்கனவே ரீசார்ஜ் செய்த ஆக்டிவான பேஸ் பிளான் ஒன்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான 4ஜி வேகத்திலான டேட்டா பிளான் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே உங்களால் மேற்படி கூறியுள்ள இந்த அன்லிமிடெட் 5ஜி பிளானை அனுபவிக்க முடியும்.

ரூ.199 ரூ.639 ரூ.299 போன்ற ரீசார்ஜ் பிளான்களில் உள்ளவர்கள் மேற்படி கூறிய 5ஜி டேட்டா பிளானில் இணைய தகுதியானவர்களாவர். துரதிஷ்டவசமாக ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா என்ற அளவில் வரும் ரூ.1,899 ஓராண்டிற்கான ரீசார்ஜ் பிளானில் இணைந்துள்ளவர்களுக்கு இந்த வவுச்சர் வேலை செய்யாது.

இந்த ரூ.601க்கான டேட்டா வவுச்சரை கொண்டு என்ன பயன்களை நாம் அனுபவிக்க முடியும்?

ஜியோவின் ரூ.601க்கான ஜியோ ட்ரூ 5ஜி கிஃப்ட் வவுச்சரை நீங்கள் வாங்கினால், 12 அப்கிரேட் வவுச்சர்கள் உங்களுக்கு வழங்கப்படும். இவற்றை மை ஜியோ ஆப் மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் ரெடீம் செய்து கொள்ளலாம். ஒருமுறை நீங்கள் இந்த வவுச்சரை ஆக்டிவேட் செய்துவிட்டால் அளவில்லாத 5ஜி டேட்டாவை நீங்கள் அனுபவிக்க முடியும். மேலும் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்த முடியும். நீங்கள் ஆக்டிவேட் செய்யும் வவுச்சர் வேலிடிட்டியானது உங்களது ஃபோனில் அந்த நேரத்தில் ஆக்டிவாக உள்ள பேஸ் ப்ளானின் வேலிடிட்டியைப் பொறுத்து அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்…

இந்த வவுச்சரின் அதிகபட்ச வேலிடிட்டி 30 நாட்களாகும். அதாவது உங்களது பேஸ் பிளான் 28 நாட்களுக்கான வேலிடிட்டியை மட்டும் கொண்டிருந்தால், நீங்கள் ஆக்டிவேட் செய்யும் வவுச்சரின் வேலிடிட்டியும் 28 நாட்களாக இருக்கும். இந்த ஓராண்டிற்கான வவுச்சரை நீங்கள் வாங்கும்போது உங்களுக்கு 12 வவுச்சர்கள் வழங்கப்படும். அதாவது மாதத்திற்கு 1 வவுச்சர் வீதம் 12 மாதங்களுக்கான வவுச்சரை நீங்கள் விரும்பிய நேரத்தில் ஆக்டிவேட் செய்து பயனடையலாம்.

யாரெல்லாம் இந்த பிளானை அனுபவிக்க முடியும்?

ரூ.199, ரூ.239, ரூ.319, ரூ.329, ரூ.579, ரூ.666, ரூ.769, ரூ.899 போன்ற திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால் மேற்படி கூறிய ஓராண்டிற்கான டேட்டா வவுச்சர் திட்டத்தில் நீங்கள் இணைய முடியும். மேற்படி கூறிய பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பேஸ் பிளான் அதற்கு தகுதியானதா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.

இதையும் படிக்க: வாட்ஸ்அப் யூஸர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்… 2025 ஜனவரி முதல் இந்த ஆண்ட்ராய்டு மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாதாம்…!

இந்த டேட்டா வவுச்சரை மற்றவருக்கு எப்படி பரிசளிப்பது?

இந்த 600 ரூபாய்க்கான டேட்டா வவுச்சரை நீங்கள் மற்றவர்களுக்கு பரிசளிக்கலாம். மை ஜியோ ஆப் இன் மூலமாக இந்த கிஃப்ட் வவுச்சரை வாங்கி உங்களது நண்பர் அல்லது குடும்பத்தாருக்கு பரிசளிக்க முடியும். பரிசளிப்பதற்கு முன் அவர்கள் இந்த பிளானை பயன்படுத்த தகுதியான பேஸ் ப்ளானில் உள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



Source link