Last Updated:

இந்திய ரிசர்வ் வங்கி இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

News18

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், 1.88 சதவீத கரன்சி நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.6,691 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த கரன்சி நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றுவதற்கான வசதியை ரிசர்வ் வங்கி வழங்கியது. மே 19, 2023 அன்று 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டபோது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இது டிசம்பர் 31, 2024 அன்று ரூ.6,691 கோடியாக குறைந்தது.

அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு மே 19 வரை புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீதம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அப்போதைய ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த பிறகு, ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது. வங்கிகளில் போதிய அளவு மற்ற வகை நோட்டுகள் கிடைத்ததை அடுத்து, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. எனவே, 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ISRO Achievement: விண்வெளியில் தாவரங்களை வளர்த்து சாதனை… புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ..!

உங்களிடம் இன்னும் ரூ.2,000 கரன்சி நோட்டுகள் இருந்தால், ரிசர்வ் வங்கியின் கிளைக்குச் சென்று ஃபார்மை பூர்த்தி செய்து நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

ரூ.2,000 கரன்சி நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால், இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

  • ரூ.2,000 கரன்சி நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்குச் செல்லவும்.
  • மாற்ற வேண்டிய கரன்சி நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.50,000க்கு மேல் இருந்தால், உங்கள் பான் கார்டை காட்டி, அதன் போட்டோ காப்பியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • முகவரி, ஆதார், மொபைல் எண் மற்றும் மாற்ற வேண்டிய 2,000 கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை ஃபார்மில் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: இந்தியாவின் பணக்கார முதல்வர் யார் தெரியுமா? ஸ்டாலினுக்கு எந்த இடம்?

  • ஃபார்மை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் ஆதார் கார்டின் போட்டோ காப்பியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அனைத்து ஃபார்மாலிடிசும் முடிந்த பின்னர், நீங்கள் கொடுக்கும் 2,000 கரன்சி நோட்டுகளுக்கு ஈடாக உங்களுக்கு பணம் வழங்கப்படும்.



Source link