ரெட்மி A4 5G என்பது இந்தியாவில் மலிவான 5G போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 4 சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து யூசர்களால் விரும்பப்படுகிறது. ஏனெனில் இது சிறந்த அம்சங்கள் மற்றும் குறைந்த விலையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த போனில் ஒரு பிரச்சனை உள்ளது. ஏனெனில் இது ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ரெட்மி A4 5G ஃபோன் SA (standalone) 5G நெட்வொர்க்கில் மட்டுமே இயங்குகிறது. ஆனால் ஏர்டெல்லின் NSA (Non-Standalone) 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த போனில் உள்ள 5ஜி வேகத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. 4ஜி வேகம் மட்டுமே கிடைக்கும்.

விளம்பரம்

ஆனால், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜியோவின் 5ஜி நெட்வொர்க் SA (standalone) தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. எனவே ரெட்மி A4 5G ஜியோவின் 5G நெட்வொர்க்குடன் நன்றாக வேலை செய்கிறது. ஏர்டெல் நெட்வொர்க்குக்கும், ரெட்மி ஏ4 5ஜி நெட்வொர்க்குக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த போனில் 5ஜியைப் பெற மாட்டார்கள்.

ரெட்மி A4 5Gஆனது ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மலிவு விலையில் 5G இணைப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் SA 5G நெட்வொர்க்கில் மட்டுமே இயங்குகிறது. ஏர்டெல் தற்போது NSA 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது. இது பழைய 4G நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. அதனால் ஏர்டெல் யூசர்களுக்கு இந்த போனில் 5ஜி வேகம் கிடைக்காது. ஜியோவின் 5ஜி நெட்வொர்க் முற்றிலும் 5ஜி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த போனில் 5ஜியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

ரெட்மி A4 5G ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மலிவு விலையில் 5G ஃபோன் ஆகும். இது 4ஜிபி ரேம் + 64பி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வகை ஆனது ரூ.8,499 விலையிலும் மற்றும் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகை ஆனது ரூ.9,499 விலையிலும் கிடைக்கிறது.

விளம்பரம்

இந்த ஃபோனில் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் 6.88 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த போன் ஆனது ஆண்ட்ராய்டு 14இல் இயங்குகிறது. மேலும் இதில், ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50MP டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது. செல்பி, வீடியோகால் அழைப்புகளுக்கு 5MP கேமரா கொண்டுள்ளது. இதன் பேட்டரி 5160mAh மற்றும் இந்த பேட்டரியை 18W சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
வாட்ஸ்அப் மாதிரியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்..!! என்ன தெரியுமா?

ஆனால் ரெட்மி A4 5Gஇல் ஒரு சிக்கல் உள்ளது, அது Airtelஇன் 5G நெட்வொர்க்கில் வேலை செய்யாது. நீங்கள் ஏர்டெல் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மொபைலை நீங்கள் வாங்க முடியாது. ஆனால் நீங்கள் SA 5G நெட்வொர்க் உள்ள பகுதியில் வசிக்கும் ஜியோ வடிக்கையாளராக இருந்தால், இந்த ஃபோன் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்த போனானது இன்று முதல் (நவம்பர் 27) விற்பனைக்கு கிடைக்கிறது.

விளம்பரம்

.



Source link