இந்திய கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் திருமணம் நடந்தது. கடந்த 2018-ல் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பிறந்ததால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தங்களுக்கு குழந்தை பிறந்த செய்தியை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், நேற்று குழந்தை பிறந்த தேதியை குறிப்பிட்டு ஆண் குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

Also Read | ‘வாழு… வாழ விடு’ – தனுஷ் பேசிய வார்த்தைகளை வைத்தே விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!

விளம்பரம்

இந்நிலையில், கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிறகு, இந்திய அணி வீரர்கள் போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் செய்தியை உறுதிப்படுத்தி ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ரோகித்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

.



Source link