Last Updated:

மோசமான வானிலை காரணமாக, கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ பரவல் தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

News18

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 6 நாட்களைக் கடந்தும் காட்டுத் தீ பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் குடிருப்புகளை சூழ்ந்த காட்டுத் தீயால், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு பாதுகாப்பாக இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் மோசமான வானிலை காரணமாக பணிகள் மிகவும் சவால் வாய்ந்ததாக மாறியுள்ளது.

அங்கு புதன் கிழமை வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காட்டுத் தீ பரவல் தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என அந்நாட்டு தீயணைப்புத்துறை கூறியுள்ளது. இதனிடையே காட்டுத் தீ விபத்தால், கலிஃபோர்னியா மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.



Source link