லெபனானுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர், முழு வீச்சுடன் தாக்குதல் நடத்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித்தாக்குதலில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தரைவழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இந்நிலையில், லெபானானுக்கு எதிரான போரை 21 நாட்கள் நிறுத்துமாறு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது – அதிபர் புதின் எச்சரிக்கை
போரை நிறுத்த முடியாது என்று கூறிய நெதன்யாகு, தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதன் பிறகு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் வான் படைத் தளபதி உட்பட 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
.