வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவுக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
தற்போது முதல் டெஸ்ட் போட்டி முடிவுற்று இரண்டாவது டெஸ்ட் தொடர் கான்பூரில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கான்பூரி டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பின்னர் முதல் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூர்ய குமார் யாதவ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணிகள் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரியான் பராக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ்.
இதையும் படிங்க – டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவிப்பு
இவர்களில் மயங்க் யாதவ் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகம் ஆகிறார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் மயங்க் யாதவ் பந்து வீசினார் என்பது கவனிக்கத்தக்கது.
22 வயதாகும் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய அதே ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
.