Last Updated:

12 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான நிலையிலும் இந்த படம் வெற்றியை பெற்றிருப்பது, இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் பல படங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

News18

பொங்கலை முன்னிட்டு வெளியான மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

விஷால் நடிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவர வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக வெளியீடு தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளிவர வேண்டிய விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகியதால் சிறிய பட்ஜெட் தரங்கள் வெளிவந்தன.  அவற்றுடன் மதகஜராஜாவும் பொங்கல் ரேஸில் இறங்கியது.

சந்தானத்தின் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை, விஷாலின் துள்ளலான ஹீரோயிசம் உள்ளிட்டவை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. பொங்கல் வெளியிட்டில் இந்த திரைப்படம் தான் வின்னர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான நிலையிலும் இந்த படம் வெற்றியை பெற்றிருப்பது, இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் பல படங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்நிலையில் மதகஜராஜா வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – Netflix | கமல்..அஜித்..சூர்யா..டாப் ஹீரோ படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்..லிஸ்ட் இதோ!

தொடர்ந்து இந்த படத்துக்கு வரவேற்பு காணப்படுவதால் 50 கோடி ரூபாயை தாண்டி படம் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதகஜராஜா படத்தில் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். அவர்கள் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.



Source link