வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர் அமைச்சுக்களின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

அதேசமயம், பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என சிறிமேவன் தர்மசேன மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post வட மத்திய மாகாணத்தில் O/L தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியுள்ளது – பரீட்சை நிறுத்தம் appeared first on Daily Ceylon.



Source link