வட மாநில திரையரங்குகளில் இருந்து புஷ்பா 2 திரைப்படம் நீக்கப்பட்டதாக இணையத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய சினிமா வரலாற்றில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் வெளியான 14 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 1508 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது.

புதிய திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் புஷ்பா படத்தின் வசூல் குறிப்பிடும் வகையில் குறையவில்லை. தொடர்ந்து இந்த திரைப்படம் வசூரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த திரைப்படம் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

விளம்பரம்

இந்த நிலையில் வடமாநிலங்களில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதற்கு திரையரங்குகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும், புஷ்பா 2 திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் நீக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தன.

தற்போது வரை இந்த திரைப்படம் சுமார் 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறப்பு காட்சியின் போது நெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

விளம்பரம்

4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தி வட்டாரத்தில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதற்கிடையே புஷ்பா படத்துடைய சட்டவிரோதமான எச்.டி. பிரிண்ட் வெளியாகி படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க – Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு… விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து…

வழக்கமாக 4 வாரங்களுக்கு பின்னரே ஓடிடி-யில் வெளியானதை தொடர்ந்து சட்ட விரோதமாக எச்.டி. பிரிண்ட் கள் வெளிவரக்கூடும். ஆனால் புஷ்பா படத்திற்கு 2 வாரத்திலேயே எச்.டி. பிரிண்ட் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பட குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.

விளம்பரம்

.



Source link