இனி இன்ஸ்டாகிராம் மூலமாகவும் உங்களால் ஒரு மணி நேரம் வரை லைவ் லொகேஷனை பிறருக்கு நேரடி குறுஞ்செய்தி(Direct Message) மூலமாக ஷேர் செய்ய முடியும். இது பற்றிய விளக்கமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இன்ஸ்டாகிராமில் தற்போது லொகேஷன் ஷேரிங் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக யூசர்கள் தங்களுடைய லைவ் லொகேஷன்களை ஒரு மணி நேரம் வரை Direct Message (DM) மூலமாக  பிறருக்கு ஷேர் செய்யலாம். சேரும் நேரங்களை ஒருங்கிணைப்பதற்கு மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பின் செய்வதற்கு அல்லது கூட்டம் அதிகமாக உள்ள கான்செர்ட் அல்லது கிரிக்கெட் மேட்ச் போன்றவற்றில் உங்களுடைய நண்பர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும்.

விளம்பரம்

இந்த லைவ் லொகேஷன் அம்சம் டிஃபால்ட் ஆக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும். மேலும் பிரைவேட்டாக DM-களில் மட்டுமே இதனை உங்களால் ஷேர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஷேர் செய்த லொகேஷனை நீங்கள் இருவர் மட்டுமே காண முடியும். வேறு யாவருக்கும் இதனை ஃபார்வேர்ட் செய்ய முடியாது.

மேலும் லைவ் லொகேஷன் ஷேர் ஆகி கொண்டு இருப்பதை சாட்டின் மேற்புறத்தில் உள்ள இண்டிகேட்டர் காண்பிக்கும். அது மட்டும் அல்லாமல் யூசர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் லைவ் லொகேஷனை நிறுத்தி வைக்கலாம். ஆனால் மெட்டாவிற்கு சொந்தமான இந்த சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் ஆன இன்ஸ்டாகிராம் வெளியீட்டுள்ள இந்த லொகேஷன் ஷேரிங் அம்சங்கள் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது.

விளம்பரம்
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.!


குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.!

DMகளில் செல்லப்பெயர்(Nickname): DMகளில் சாட்டிங் செய்யும் இருவரும் செல்ல பெயர்களை பயன்படுத்துவதற்கான ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. இந்த பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றாலும் கூட இது DM சாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்ஸ்டாகிராமில் உள்ள யூசர் நேம் எந்த வகையிலும் மாறாது. ஒரு யூசரை ஃபாலோ செய்யும் அனைவரும் அவர்களுடைய செல்லப் பெயரை டிஃபால்ட் ஆக மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் ஒரு சாட்டில் இந்த செல்ல பெயரை யார் மாற்றலாம் என்ற கட்டுப்பாட்டை வழங்கக்கூடிய அனுமதியும் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட DMல் நிக்நேமை உருவாக்குவதற்கு ஒருவர் சாட் நேமின் மேற்புறத்தில் காணப்படும் ‘நிக் நேம்ஸ்’ (Nicknames) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அந்த குறிப்பிட்ட சாட்டுக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமோ அதனை வைத்துகொள்ளலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்த ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அரசாங்கம் புதிய எச்சரிக்கை: எப்படி பாதுகாப்பாக இருப்பது…?

ஸ்டிக்கர்கள் அறிமுகம்: மேலும் DMகளுக்கு 17 புதிய ஸ்டிக்கர் பேக்குகளை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சாட்டில் குறிப்பிட்ட ஒரு ஸ்டிக்கரை ஃபேவரெட்டாக மாற்றுவதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இதனால் அடுத்தடுத்து வரும் சாட்டுகளில் நீங்கள் இந்த ஸ்டிக்கரை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

.



Source link