Last Updated:

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

News18

விடாமுயற்சி படத்திலிருந்து வெளியாகியுள்ள முதல் பாடல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது. இதனை ”வைப்” மெட்டீரியல் என ரசிகர்கள் இணையதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் திரைப்படம் பொங்கலையொட்டி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலாக Sawadeeka (சவதீகா) என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பார்ட்டி பாடலாக வெளியாகி உள்ள இந்த பாடல் இணையத்தில் அதிக விருப்பங்களை குவித்து வருகிறது.

பாடல் வித்தியாசமாக இருப்பதாகவும், ”வைப்” மெட்டீரியல் எனவும் அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் சீமான் தெரிவித்த ”இருங்க பாய்” என்ற வார்த்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதனை அனிருத் இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துடைய சில காட்சிகளுக்காக அஜித் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

இதையும் படிங்க – விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறைவு.. அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் மகிழ் திருமேனி…

மீகாமன், கலக தலைவன், தடம் உள்ளிட்ட விறுவிறுப்பான படங்களை இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்திருப்பதால் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.



Source link