டைரி பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் குறைந்து வந்தாலும், மீண்டும் மக்களுக்கு டைரி மீது ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வகைகளில் டைரி மார்க்கெட்டில் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு ஸ்பெஷலாக வந்துள்ளது இந்த ஸ்மார்ட் டைரி. வழக்கமான டைரி ஒரு ஆண்டுடன் காலம் முடிவடைந்து விடுவது போல் இல்லாமல் இந்த டைரியை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க: Thiruvalluvar Statue Silver Jubilee: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா… மின்னொளியில் ஒளிர்ந்த கண்ணாடி பாலம், 133 அடி உயர சிலை…

மேலும் இந்த டைரியில் இந்த கால ட்ரெண்டுக்கு எற்ற வகையில் பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாகவும், இளசுகளை ஈர்க்கும் வகையிலும் பென் டிரைவ், பவர் பேங்க், வயர்லெஸ் சார்ஜர் என பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதுகுறித்து கணேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் கடந்த 30 வருடங்களாக மெஜஸ்டிக் புக் ஹவுஸ் என்ற பெயரில் புக் ஹவுஸ் வைத்திருக்கிறோம். கடந்த பத்து வருடங்களாக டைரி செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் டைரியில் புதுமைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். 10 வருடங்களுக்கு முன்னால் டைரி என்றால் டைரி மட்டும்தான். தற்போது அதில் புதுப்புது பயன்களை கொண்டு வரும் வகையில் வடிவமைத்து வருகிறோம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் டைரியில் பிளாஸ்க் வைத்து கொண்டு வந்தோம். அடுத்ததாக டைரியில் கீ செயின், பர்ஸ் போன்றவற்றை கொண்டு வந்தோம். இதற்குக் காரணம் நாங்கள் கார்ப்பரேட்டிற்கு புக் கொடுப்பது. அவர்கள் அவர்களுடைய தொழிலாளர்களுக்கு புதிதாக கொடுக்க விரும்புவார்கள். அதனால் நாங்கள் இவ்வாறு தயாரிக்கிறோம்.

இதையும் படிங்க: பட்டதாரிகள் கவனத்திற்கு… SBI வங்கியில் 600 அதிகாரி காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பியுங்கள்

இப்பொழுது டிஜிட்டலாக விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றபடி என்ன செய்யலாம் என யோசித்த போது இந்த கால மக்கள் மொபைல் போன், லேப்டாப் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பயணத்தின் போது அதற்கு சார்ஜ் போடுவதற்கு தனித்தனியாக பவர் பேங்க் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆகையால் அதை மாற்றும் வகையில் டைரியில் பவர் பேங்க் கொண்டு வந்தோம். இது ஸ்மார்ட் டைரி இதனுள் பவர் பேங்க் இருக்கிறது. மொபைலை சார்ஜ் போடுவது போன்று சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். பிறகு மொபைல் இருக்கு ஏற்றவாறு இந்த பின் செட் ஆகிறதோ அதை பயன்படுத்திக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் செய்யலாம்.

இது அனைத்தும் டிராவல் பண்ணுறவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விசிட்டிங் கார்டு வைத்துக் கொள்வது போன்று நிறைய அம்சங்களும் உள்ளது. இதில் பென் டிரைவும் வைத்திருக்கிறோம். இந்த பென் டிரைவ் 16 ஜிபி பென் டிரைவ். இது மட்டுமில்லாமல் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கிறது. இதன் மேல் மொபைல் வைத்தால் போதும் மொபைலில் சார்ஜ் தானாக ஏறிக்கொள்ளும். மேலும் இந்த டைரியில் செல்போன் ஸ்டாண்டும் இருக்கிறது.

இதையும் படிங்க: RRB Group D Recruitment: 10ஆம் வகுப்பு போதும்… இந்திய ரயில்வேயில் 32,000 காலியிடங்கள்…

இந்த ஸ்மார்ட் டைரியில் உள்ள பக்கங்கள் டேட் இல்லாமல் தான் வரும். ஆகையால் ஒருமுறை டைரி வாங்கினால் போதும், பக்கங்கள் முடிந்ததும் தனியாக அவற்றை மட்டும் வாங்கி எளிதாக இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த ஆண்டும் இதனை பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்



Source link