உங்களது மாப்பிள்ளை சினிமாத்துறையை சேர்ந்தவரா? அல்லது வேறு துறையை சேர்ந்தவரா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்த ‘நச்’ பதில் கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரில் இடம் பெற்ற ‘புஷ்பான்னா வைல்டு ஃபயர்’ என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு படத்தின் புரோமோஷனில் படக்குழு இறங்கியுள்ளது.
அந்த வகையில், ‘புஷ்பா-2’ படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகாவிடம், அவரது வருங்கால கணவர் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்” என ராஷ்மிகா பதிலளித்ததும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
.