Last Updated:
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் நிவாரணம் பெறுவார்கள். இந்த நடவடிக்கை பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் அரசின் நோக்கத்தையும் நிறைவேற்றும்.
ரூ. 10.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி செலுத்துவது குறைக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவின் நோக்கம் மெதுவான பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் நுகர்வை ஊக்குவிப்பதாகும். தற்போது, ₹3 லட்சம் முதல் ₹10.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% முதல் 20% வரையிலும், ₹10.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரையிலும் வரி விதிக்கப்படுகிறது.
ஆய்வு அறிக்கைகளின்படி, 2024 ஜூலை-செப்டம்பரில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 காலாண்டுகளில் மிகவும் பலவீனமாக உள்ளது. அதே நேரத்தில், உணவுப் பணவீக்கம் நகர்ப்புற குடும்பங்களின் வருமானத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, வாகனங்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் தேவையை பாதிக்கிறது.
ரூ. 10.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள வருமானத்திற்கு வரி குறைப்பு செய்யும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதிக செலவழிப்பு வருமானம் நுகர்வோரின் கைகளுக்கு வரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், இது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்த முடியும்.
வரிக் குறைப்பின் அளவு மற்றும் பிற விவரங்கள் பட்ஜெட் தேதிக்கு அருகில் அதாவது வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு சற்று முன்பாக எடுக்கப்படும் . இருப்பினும், நிதி அமைச்சகம் இந்த முன்மொழிவு அல்லது வருவாயில் அதன் தாக்கம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. அதிகளவானோர் ரூ. 10.5 லட்சம் வரையிலான வருமானத்தில் இணைந்ததன் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஈடுசெய்யப்படும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க – சிபில் ஸ்கோர் 450 இருந்தால் தனிநபர் கடன் கிடைக்குமா…?
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் நிவாரணம் பெறுவார்கள். இந்த நடவடிக்கை பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் அரசின் நோக்கத்தையும் நிறைவேற்றும்.
December 27, 2024 7:41 PM IST
வருமான வரிச் செலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்