2024ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்து அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 2.8% விகிதத்தில் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்து சிறிய அளவில் குறைந்திருந்தாலும், தொடர்ந்து வலுவான நிலையிலேயே உள்ளதாக அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் பதிவான ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சம்பள உயர்வு ஆகியவற்றால், மக்கள் செலவு செய்வது அதிகரித்து அந்நாட்டின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. கூடுதலாக அந்நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்து, ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

விளம்பரம்

மேலும், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையும் வலுவான நிலையிலேயே இருப்பதாக, அந்நாட்டின் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வார முடிவில், அதாவது நவம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி, வேலையின்மை காப்பீடு கோரும் நபர்களின் எண்ணிக்கை 2.15 லட்சத்தில் இருந்து 2.13 லட்சமாக குறைந்துள்ளது.

இது வேலைவாய்ப்பு சந்தையில் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதை காட்டுகிறது. இருப்பினும், நீண்ட கால வேலையின்மை காப்பீடு கோரும் நபர்களின் எண்ணிக்கை 9,000 அதிகரித்து, 1.097 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையில் நிச்சயமற்ற நிலை இருப்பதையும் உணர முடிகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
உங்கள் மொபைல் எப்போதும் புத்தம் புதுசா இருக்கணுமா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க…

அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், வலுவான நிலையிலேயே இருந்து வருகிறது. அதற்கு எடுத்துக் காட்டாக அமெரிக்க பங்குச் சந்தை நிலவரம் மற்றும் டாலரின் மதிப்பு நன்றாக இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளியான பிறகு சர்வதேச சந்தையில் ஒரு மணி நேரத்தில் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,657 டாலரில் இருந்து 2,650 டாலராக குறைந்துள்ளது.

விளம்பரம்

அதேபோல், சர்வதேச நாணய சந்தையில் டாலரின் மதிப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது இருப்பினும், இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து நன்கு யோசித்து முடிவெடுங்கள்.

.



Source link