‘இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாட்டில்  வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்துக்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுப் படுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தைடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை வந்தடைந்தது.  ஏனைய நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றது.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள்’ நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள்’,  ‘தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு’ , ‘திறமைக்கு இயலாமை தடைகள் அல்ல’   போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வவுனியா விசேட நிருபர்)





Source link