வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் appeared first on Daily Ceylon.