வாட்ஸ்அப்பில், அழைப்புகளை ரெக்கார்ட் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில் வாட்ஸ்அப், இன்-பில்ட் கால் ரெக்கார்டிங் விருப்பத்தை வழங்கவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப், உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மே 2024 நிலவரப்படி, 535.8 மில்லியன் பயனர்களுடன், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் பயனர்களை இந்தியா கொண்டுள்ளது.

இன்று கிட்டத்தட்ட 99% மொபைல் பயனர்களால் பயன்படுத்தப்படும் பிரபலமான உடனடி மெசேஜிங் ஆப்பாக வாட்ஸ்அப் உள்ளது. இது மக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க அனுமதிக்கிறது.

விளம்பரம்

சாதாரண மெசேஜிங் ஆப்பாக 2009இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், காலப்போக்கில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதில் இல்லாத ஒரு அம்சம் என்றால் அது கால் ரெக்கார்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஸ்மார்ட்போன் பயனர்கள் வழக்கமான அழைப்புகளைப் போலவே, வாட்ஸ்அப் அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

ஆனால் வாட்ஸ்அப்பில், அழைப்புகளை பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், வாட்ஸ்அப் இன்-பில்ட் கால் ரெக்கார்டிங் விருப்பத்தை வழங்கவில்லை. ஆனால், மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.

விளம்பரம்

கால்ஸ் ரெக்கார்டிங் ஆப்கள்

கியூப் ஏசிஆர் (Cube ACR): இந்த பிரபலமான கால்ஸ் ரெக்கார்டிங் ஆப் மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளையும், மற்ற தளங்களில் உள்ள அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்ய முடியும்.

சேல்ஸ்டிரெயல் (Salestrail): பிரீமியம் கால்ஸ் ரெக்கார்டிங் ஆப்பான இது, நிபுணர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏசிஆர் கால் ரெக்கார்டர் (ACR Call Recorder): பரவலாக பயன்படுத்தப்படும் இந்த ஆப் பயனர்களுக்கு எளிமையாகவும், வசதியாகவும் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேற விரும்புகிறீர்களா…? உங்கள் கணக்கை நீக்க உதவும் எளிய வழிமுறைகள்…

விளம்பரம்

வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

  • கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கியூப் ஏசிஆர் (Cube ACR), சேல்ஸ்டிரெயல் (Salestrail) அல்லது ஏசிஆர் கால்ஸ் ரெக்கார்டர் (ACR Call Recorder) ஆகிய ஆப்களில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

  • பின்னர், இதனைப் பயன்படுத்த தேவையான அனுமதிகளை வழங்கவும்.

  • ஒரு சில ஆப்களில், ஒவ்வொரு அழைப்பின்போதும், நீங்களே ரெக்கார்ட் செய்ய வேண்டியிருக்கும்.

  • மேற்குறிப்பிட்ட படிகளை முடித்த பிறகு, இந்த ஆப்கள் தானாகவே வாட்ஸ்அப் கால்ஸ் வரும்போது பதிவு செய்யத் தொடங்கும்.

  • அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர், இந்த ஆப்பில் உள்ள ரெக்கார்டை நீங்கள் கேட்க முடியும்.

.



Source link