பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சமீபத்தில் லைவ்-லொகேஷன் ஷேரிங், ஸ்டிக்கர் பேக்குள் உள்ளிட்ட புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், யூசர்கள் தங்கள் நண்பர்களுக்கு, தற்போது இருக்கும் இடத்தை நேரடியாக மெசேஜில் அனுப்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.
வாட்ஸ்அப்பைப் போலவே இன்ஸ்டாகிராமும் தற்போது, பயனர்கள் தங்கள் லைவ் லொகேஷனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சம் மற்ற பிற சமூக ஊடகதளங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், இன்ஸ்டாகிராமுக்கு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராமின் டைரக்ட் மெசேஜ் பிரிவில் பயன்படுத்த முடியும். இதுதவிர, புதிய ஸ்டிக்கர் பேக்குகள் மற்றும் புனைப்பெயர்கள் உள்ளிட்ட வேறு சில புதிய அம்சங்களையும் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது உங்கள் டைரக்ட் மெசேஜ்களில், உங்கள் லைவ் லொகேஷனை 1 மணி நேரம் வரை பகிரலாம். இது ஒரு குழுவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அல்லது நெரிசலான இடங்களில் ஒருவரையொருவர் கண்டறிய மேப்பில் ஒரு இடத்தைப் பின் தொடர வழி செய்கிறது. கச்சேரிகள், பயணங்கள் அல்லது நண்பர்களுடன் ஒன்று சேரும் பிற கூட்டமான இடங்களுக்கு இந்த அம்சம் ஏற்றதாக இருக்கிறது. நண்பர்கள் ஒன்றாக அதிக நேரத்தை செலவிடவும், நண்பர்களை ஒருங்கிணைக்க குறைவான நேரத்தை செலவிடவும் இந்த அம்சம் பெரிதும் உதவுகிறது.
இன்ஸ்டாகிராமின் லைவ் லொகேஷன் அம்சமானது, உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தை டிஎம்கள் (டிரைக்ட் மெசேஜ்) மூலம் தனிப்பட்ட முறையில் அல்லது குழுக்களில் பகிர உதவுகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். மேலும் குறிப்பிட்ட குழுக்களில் உள்ள நபர்களால் மட்டுமே இதனை பார்க்க முடியும், மேலும் அதை வேறு யாருக்கும் அனுப்ப முடியாது.
லைவ் லொகேஷன் அம்சம் பயன்பாட்டில் இருக்கும்போது, அது குழுவின் மேற்புறத்தில் குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக் காட்டப்படும். மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் உங்களது இருப்பிடத்தை பகிர்வதை நிறுத்தலாம். இந்த அம்சம் தனிநபரின் பிரைவசியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் இருப்பிடத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பான வழியாகும். எனவே இந்த அம்சத்தை எப்பொழுதும் பொறுப்புடனும் மற்றும் உங்கள் நம்பகமான நபர்களுடன் மட்டுமே பகிரவும். இந்த லைவ் லொகேஷன் அம்சம் தற்போது குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் எந்தெந்த நாடுகள் என்கிற பட்டியல் ஏதும் இல்லை.
புதிய ஸ்டிக்கர்கள்
இன்ஸ்டாகிராம் 17 புதிய ஸ்டிக்கர் பேக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வார்த்தைகள் குறையும்போது உங்கள் டிஎம்-களை (டிரைக்ட் மெசேஜ்) சுவாரஸ்யமாக்க தற்போது 300-க்கும் மேற்பட்ட வேடிக்கையான ஸ்டிக்கர்களை வழங்கியுள்ளது.
நீங்கள் இப்போது குழுக்களில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை நேரடியாக பயன்படுத்தலாம். இது நண்பர்களால் பகிரப்பட்ட அல்லது குழுவின் மற்ற நபர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை மீண்டும் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், உங்கள் உரையாடல்களை திறமையாக கையாளவும், இந்த ஸ்டிக்கர்கள் உங்கள் டிஎம்-ல் தனித்து நிற்கிறது மற்றும் தனிப்பட்டதாக இருப்பதை உறுதி செய்கிறது.
இது தவிர, இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ புனைப்பெயர்களை வைக்கும் மற்றொரு புதிய அம்சத்தையும் டிஎம்-களில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட பெயர்களை எளிதாக்க அல்லது உங்கள் உரையாடல்களில் தனிப்பட்ட தொடர்புக்காக அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த புனைப்பெயர் அம்சம் உங்கள் டிஎம்-களில் மட்டுமே காணப்படும். மற்ற இடங்களில் பயனர்களின் பெயர்களை இது பாதிக்காது.
இதையும் படிக்க:
ஜியோவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிரந்தரமாக தடுக்க வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க…
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றை மாற்றலாம் மற்றும் உரையாடல்களில் புனைப்பெயர்களை யார் மாற்றலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியும். இது உங்களுக்கு மட்டும் அல்லது நீங்கள் பின்தொடரும் நபர்களில் யார் மாற்றங்களை செய்யலாம் என்பதை தேர்வு செய்யும்படி இயல்பாக இருக்கும்.
புனைப்பெயரை உருவாக்க, உங்கள் சேட் பகுதியின் மேலே உள்ள உரையாடலைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், புனைப்பெயர்கள் மற்றும் உரையாடலில் சேர்க்க விரும்பும் நபரின் பயனர் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.
.