பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியையும், ஏதேனும் மெசேஜ் ரீட் செய்யாமல் இருந்தால் அதனை நினைவுப்படுத்தும் வசதியையும் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் யூசர்களின் சாட் அனுபவம் மேம்படும் என வாட்ஸ் அப் நம்புகிறது.

ஆன்லைன் கவுன்ட்டர் ஃபார் குரூப் சாட்ஸ் (Online counter for group chats)

விளம்பரம்

வாட்ஸ் அப்பின் சோதனை நிலையில் உள்ள இந்த அப்டேட் மூலம் ஒரு குரூப் சாட்டில் எத்தனை பேர் தற்போது ஆன்லைனில் உள்ளனர் எனும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் ஆன வாட்ஸ்அப் பீட்டா ஃபார் ஆண்ட்ராய்டு 2.4.25 30 வெர்ஷனில் இந்த அப்டேட் சோதனை முறையில் உள்ளது. குரூப் சாட்டின் மேற்புறத்தில் கீழேயும் குரூப் பெயரின் சற்று கீழேயும் எந்த ஆன்லைன் கவுண்டர் எண்ணிக்கை காண்பிக்கப்படும்.

விளம்பரம்

இந்த ஆன்லைன் கவுண்டரில் எத்தனை நபர்கள் தற்போது ஆன்லைனில் உள்ளனர் என்ற விவரம் காண்பிக்கப்படும். இதனைக் கொண்டு சில முக்கியமான செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஏற்ற நேரத்தை நம்மால் தேர்வு செய்ய முடியும். அதே நேரத்தில் யூசர்களின் பிரைவசியை மதிக்கும் பொருட்டு, ஆன்லைன் செயல்பாட்டை மறைக்கும் வசதியையும் வாட்ஸ்அப் அளிக்கிறது. இவ்வாறு ஆன்லைன் விசிபிலிட்டியை யாரேனும் மறைத்திருந்தால், அவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் அவர்களின் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது.

இந்த புதிய அப்டேட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதாவது ஒரு நபர் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அவரின் இன்டர்நெட் கனெக்ஷன் ஆக்டிவாக இருந்தால் அவர் ஆன்லைனில் உள்ளதாக வாட்ஸ் அப் எடுத்துக் கொள்ளும். அதனைக் கொண்டு அவர் ஆக்டிவாக சாட் செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் கருத முடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த 5G ஃபோன்கள்… லிஸ்ட் இதோ!

ஒரு குழுவாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு இந்த வசதி மிகவும் உபயோகமானதாக இருக்கும். குழுவிலுள்ள பலருக்கும் ஒரு செய்தி சென்றடைய வேண்டும் எனும் பட்சத்தில் அனைவரும் ஆன்லைனில் இருக்கும்போது நீங்கள் இதனைப் பற்றி பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மெசேஜ் ரிமைண்டர்

ஆன்லைன் கவுன்ட்டர் வசதியை அடுத்து இரண்டாவதாக அன்ரீடில் உள்ள மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியும் மேலே சொன்ன ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே நாம் பார்க்காத ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் மேலே முதலில் காண்பிக்கப்படுவதுபோல, இந்த புதிய அப்டேட்டில் இதுவரை நாம் படிக்காத வாட்ஸ் அப் மெசேஜ்கள் முதன்மையாக காண்பிக்கப்படும் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதன் மூலம் சில முக்கியமான செய்திகளை நீங்கள் தவற விடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.

பாலில் மட்டுமல்ல… இந்த 7 உணவுகளிலும் கால்சியம் சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது.!


பாலில் மட்டுமல்ல… இந்த 7 உணவுகளிலும் கால்சியம் சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது.!

அதிகமாக சாட் செய்யும் நபர்கள் அல்லது மெசேஜை அடிக்கடி படிக்காமல் தவறவிடும் நபர்களுக்கு இந்த அப்டேட் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

.



Source link