Last Updated:

உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சாட்ஜிபியுடன்(ChatGPT) நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஒபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

News18

உலகளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் சாட்ஜிபிடி(ChatGPT)யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போல ஏஐயுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான உதவி, ஆலோசனை, பரிந்துரைகள் அல்லது பொதுவான உரையாடலைப் பெற பயனாளர்களை அனுமதிக்கிறது.

உலகளவில் 2.7 பில்லியன் பயனாளர்கள் பிரத்யேக எண் மூலம் சாட்ஜிபிடியுடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் கூடுதல் அம்சமாக, சாட்ஜிபிடியுடன் வாய்ஸ் கால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சாட்ஜிபிடியின் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சோதனைக்குரியது என்பதால், மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தேடும் பயனாளர்கள் தங்கள் முதன்மை சாட்ஜிபிடி கணக்குகளைப் பயன்படுத்துமாறு ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது.



Source link