இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) நாட்டில் இருக்கும் அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கும் டேட்டா பலன்கள் இன்றி வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சர்விஸ்களை மட்டுமே வழங்கும் சிறப்பு கட்டண வவுச்சர்களை (STV) வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனம் வாய்ஸ்-ஓன்லி ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி இருக்கிறது.
கூடுதலாக ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் அதன் பழைய வேல்யூ பேக்ஸ்களில் சிலவற்றை தொகுக்கப்பட்ட டேட்டா பிளான்களுடன் திருத்தி, புதிய ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தும் என்று ஒரு பிரபல டிப்ஸ்டர் தகவல் கூறி இருக்கிறார்.
இலவச எஸ்எம்எஸ் அடங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் வாய்ஸ்-ஒன்லி பிளான்:
மொபைல் டேட்டா தேவையில்லாத ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் யூஸர்கள், தற்போது இந்தியாவில் இரண்டு புதிய வேல்யூ பேக்ஸ்களை அணுகலாம். அதில் ஒரு பிளானின் விலை ரூ.458 ஆகும். இந்த பிளான் மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட் கொண்டது. மேலும், இது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்ஸ் சர்வீஸ் மற்றும் 1,000 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
ஜியோவின் மற்றொரு வாய்ஸ்-ஒன்லி பிளானின் விலை ரூ.1,958 ஆகும். இந்த பிளானும் அன்லிமிட்ட் வாய்ஸ் கால்ஸ்களுடன் மொத்தம் 3,600 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது மற்றும் இந்த பிளான் 365 நாட்கள் வேலிடிட்டி பீரியட் கொண்டது. இந்த வாய்ஸ்-ஒன்லி பிளான்கள் டேட்டா ஆஃபரை வழங்காவிட்டாலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன்களை வழங்குகிறது.
இதையும் படிக்க: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… சிக்னல் இல்லாமல் கூட அழைப்புகளை செய்யலாம்…!
வைஃபை அதிகம் பயன்படுத்தும் ஜியோ யூஸர்கள், இந்த இரண்டு வாய்ஸ்-ஒன்லி பிளானில் எதாவது ஒன்றை தேர்வு செய்தால் கூடுதல் கட்டணம் இல்லாமல், பிளானின் வேலிடிட்டி பீரியட் வரை வழங்கப்படும் இந்த இலவச சப்ஸ்கிரிப்ஷன்களை அனுபவிக்க உதவுகிறது. இதனிடையே ஜியோவின் போட்டியாளரான பாரதி ஏர்டெல், TRAI-யின் உத்தரவைத் தொடர்ந்து, நாட்டில் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு மட்டுமான புதிய பிளான்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் பழைய டேட்டா பிளான்களின் விலையை திருத்த உள்ள ஜியோ…!
பிரபல டிப்ஸ்டரான அபிஷேக் யாதவின் (@yabhishekhd) எக்ஸ் போஸ்ட்டின்படி, 6 GB இலவச டேட்டாவை உள்ளடக்கிய பழைய ரூ.479 பிளான், விரைவில் ரூ.539 என்ற புதிய விலையில் அறிமுகப்படுத்தப்படும். அதே போல யூஸர்கள் 24GB இலவச டேட்டாவை அணுக அனுமதித்த ரூ.1,899 மதிப்புள்ள மற்றொரு பிளானின் விலை விரைவில் ரூ.2,249-ஆக அதிகரிக்கப்படலாம்.
இதையும் படிக்க: எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?
மேலும் ரூ.479 மற்றும் ரூ.1,899 பிளான்களை கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்டதாக நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்தக் கூடும் என்றும் யாதவ் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போது ரூ.458 மற்றும் ரூ.1,958 பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம், அபிஷேக் யாதவ் சொல்வது போல குறிப்பிட்ட விலையில் புதிய வாய்ஸ்-ஒன்லி பிளான்களை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
January 26, 2025 2:24 PM IST