தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், கடந்த மாதம், மொபைல் சேவை வழங்குநர்கள் டேட்டா பயன்படுத்த தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-கள் மட்டுமே அடங்கிய தனி பிளான்களை வழங்க அறிவுறுத்தும் வகையில் கட்டண விதிகளில் திருத்தம் செய்ததை தொடர்ந்து இந்த பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மொபைல் டேட்டாவை அதிகம் சார்ந்திருக்காத யூஸர்களுக்கான சேவைகளை வழங்குவதை இந்த பிளான்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்னும் குறிப்பாக சொன்னால் இந்த பிளான்களின் அறிமுகம் என்பது முக்கியமாக டேட்டாவை பயன்படுத்தாத மூத்த குடிமக்கள் மற்றும் நேரடி இணைப்பு விருப்பங்களை விரும்பும் கிராமப்புற யூஸர்கள் போன்ற குறிப்பிட்ட தரப்பினரை இலக்காக கொண்டுள்ளது.
ரூ.499 மற்றும் ரூ.1,959 ஆகிய விலைகளில் வாய்ஸ் & எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏர்டெல்லின் ரூ.499 பிளான் குறுகிய கால விருப்பத்தை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.499 பிளானின் நன்மைகள்:
- அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் ரோமிங் கால்ஸ்
- மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட்
- 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டில் 900 எஸ்எம்எஸ்-கள் இலவசம்
எனினும், அவ்வப்போது டேட்டா அக்சஸ் தேவைப்படும் யூஸர்களுக்கு, நிறுவனம் இதே போன்ற திட்டத்தை ரூ.569 என்ற விலையில் வழங்குகிறது. இதில் 6GB டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அடங்கும். எஸ்எம்எஸ் லிமிட் முடிந்தவுடன், லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 மற்றும் ஒவ்வொரு எஸ்டிடி எஸ்எம்எஸ்-க்கும் ரூ.1.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஒரே ஆப் மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இணைப்பு… மெட்டாவின் சூப்பரான அப்டேட்…!
ஏர்டெல் ரூ.1,959 பிளானின் நன்மைகள்:
- அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் ரோமிங் கால்ஸ்
- மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி பீரியட்
- 365 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டில் 3600 எஸ்எம்எஸ்-கள் இலவசம்
நீண்ட கால பலன்களை தேடுபவர்களுக்கு, ஏர்டெல்லின் இந்த ரூ.1,959 பிளான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் ஆகியவற்றுக்கான அணுகல் ஆகியவை இந்த பிளான்களின் கூடுதல் பலன்களில் அடங்கும்.
இதையும் படிக்க: Whatsapp update: வாட்ஸ்அப் யூசர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! இனி பாடல்களுடன் ஸ்டேட்டஸ் வைக்கலாம்… விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அப்டேட்…!
ரூ.499 மற்றும் ரூ.1,959 ஆகிய இரண்டு பிளான்களும் இப்போது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் வெப்சைட்டில் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கின்றன. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் இதைப் பின்பற்றி, TRAI-ன் கட்டளைக்கு இணங்க இதே போன்ற பிளான்களை அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
January 26, 2025 1:08 PM IST