லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை
நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
அது காதலாக மாற கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் ட்ரெண்டான விக்னேஷ் சிவன், நயன்தாரா இவர்களின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
Also Read:
Nayanthara: நயன்தாராவா இது? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் நயன்தாராவிக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில், தாமதத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
“நானும் ரவுடிதான்” படத்தின் பாடலை தங்களது வீடியோவில் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், அவர் தாமதித்து வந்ததன் காரணமாகவே இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிகிறது. அதன்படி நானும் ரவுடி தான் திரைப்படத்தின் 3 விநாடி காட்சியை நயன்தாராவின் திருமண ஆவணபடத்தில் இணைக்க அப்படத்தின் தயாரிப்பாளர்
தனுஷ் ரூ 10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் ஆன நயன்தாரா அறிக்கை ஒன்றில் நானும் ரவுடிதான்’ படத்துக்கு எதிரான தனுஷின் கொடும் சொற்களை தன்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது என்றும் அதனால், ஏற்பட்ட காயம் என்றென்றும் ஆறாது என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.
Also Read:
நயன்தாரா நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்கள்.. எந்தெந்த OTT-யில் பார்க்கலாம்? முழு விவரம்!
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் திரைப்படம் சரியாக ஓடவில்லை எனவும், படம் எடுக்க சொன்னால் இருவரும் காதலித்து படத்தை நன்றாக எடுக்காமல் தற்போது அவர்கள் திருமண ஆவணபடத்தில் 3 விநாடிக்கு 10 கோடி கேட்பது சரிதான் என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சிலர், எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து இருக்கிறார். அவரிடம் 3 விநாடிக்கு 10 கோடி தனுஷ் கேட்பது மிகவும் தவறு என்றும் கூறுகின்றனர்.
குறிப்பாக ஷோசியல் மீடியாவில் பல திரை பிரபலங்கள் தனுஷ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னதான் நயன்தாரா தனுஷ் செய்தது தவறு என கூறினாலும் காபிரைட் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் நானும் ரவுடி தான் திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் அவருக்கான காபிரைட் உரிமத்தை கேட்பது தவறில்லை என கூறி வருகின்றனர். மேலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் 18.11.2024 திங்கள்கிழமை அன்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் டாகுமெண்டரி படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் 88 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. விரைவில் ஒரு கோடி பார்வையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.