Last Updated:

பிரபுதேவா நடித்த ‘விஐபி’, நந்தா நடித்த ‘புன்னகை பூவே’, ஜெய்வர்மா நடித்த ‘நாம்’, பிரபு நடித்த ‘அ ஆ இ ஈ’, மதுஷாலினி நடித்த ‘பதினாறு’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார்.

News18

விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த தமிழ் சினிமாவின் இயக்குநர் சபாபதி உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

எஸ்.டி.சபா என்றும், சபா கைலாஷ் என்றும் அறியப்படும் இவர், விஜயகாந்த் நடித்த ‘பரதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1992ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பரதன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அவர், பிரசாந்த் நடித்த ‘எங்க தம்பி’, லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

முதல் படமான ‘பரதன்’ அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விஜயகாந்த் நடித்த அந்த படத்தை அவரின் ராவுத்தர் நிறுவனமே தயாரித்தது. கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்து படம் ஹிட் அடித்தது. இந்த மெகா ஹிட் இயக்குநர் சபாபதிக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.

அதன்காரணமாக, பிரபுதேவா நடித்த ‘விஐபி’, நந்தா நடித்த ‘புன்னகை பூவே’, ஜெய்வர்மா நடித்த ‘நாம்’, பிரபு நடித்த ‘அ ஆ இ ஈ’, மதுஷாலினி நடித்த ‘பதினாறு’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த ‘பந்தம்’, கன்னடத்தில் ‘ஜாலி பாய்’ ஆகிய படங்களை இயக்கினார்.

Also Read | Manmohan Singh: நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பி… மன்மோகன் சிங் எனும் ஆளுமை உருவான கதை!

தமிழில் கடைசியாக இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘பதினாறு’ படம் வெளியானது. இதற்கிடையே, கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றிய நிலையில் தன்னுடைய சொந்த ஊரான திண்டிவனம் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில் தான் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Source link