‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்தார். அன்பு இயக்க, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகும் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லாதிருந்தது. அதன் பிறகு, படை தலைவனில் ராகவா லாரன்ஸ் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் இடம்பெறச் செய்துள்ளனர் என்ற தகவல்களும் வெளியானது. இந்த நிலையில், தற்போது சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மொத்தம் 2 நிமிடமே கொண்ட இந்த ட்ரைலரை பார்க்கும்போது, யானையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ‘லப்பர் பந்து’ படத்தில் பயன்படுத்தப்பட்டு மிகப் பெரிய அளவில் ஹிட்டான விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் டிரெய்லரில் சண்முக பாண்டியனின் ஆக்சன் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

‘என்ன பெத்தவரு இந்தப் பெரியவரு’ என்று பாடல் வரிகளுடன் AI விஜயகாந்தை வைத்து டிரெய்லர் முடிக்கப்பட்டுள்ளது. படை தலைவனுக்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

.

  • First Published :



Source link