Last Updated:
Vijay | நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராடும் மக்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் சிறுவன் ராகுலின் பேச்சு “என்னை பாதித்துவிட்டது” என கூறினார். யார் அந்த சிறுவன் ராகுல்? அவர் பேசியது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் சிறுவன் ராகுலின் பேச்சு “என்னை பாதித்துவிட்டது” என கூறினார். யார் அந்த சிறுவன் ராகுல்? அவர் பேசியது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பதற்காக நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் வந்தார். அப்போது அவர் மக்கள் முன் பேசுகையில், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள்.
உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசிய வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோ எனது மனதை ஏதோ பண்ணியது. உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு. உங்க எல்லார் கூடயும் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு. அதான் வந்தேன்” என பேசினார்.
சிறுவன் ராகுல்… எங்க தளபதிய வர வச்சிடா சூப்பர் டா தம்பி @actorvijay #Parandur #ParandurAirport #ParandurProtest #SayNoToParandurAirport pic.twitter.com/JFVGTJ2Dkp
— VinothRaj(@iamVinoth001) January 20, 2025
விஜய் குறிப்பிட்ட சிறுவன் ராகுல், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோவில் சிறுவன் ராகும் பேசும்போது, “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். எங்களுடைய விவசாய நிலங்களையும், ஏரியையும், பள்ளிகளையும் அப்படியே விட்டால் போதும். அந்த விமான நிலையம் வந்து நாங்கள் என்ன மேலயா பறக்க போகிறோம்?.
இந்த விமான நிலையம் வந்தால் நாங்கள் படிக்கும் பள்ளி பாதிக்கப்படும். அவர்கள் பிள்ளைகள் படித்து பெரியாளாக வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் படித்து பெரியாளாக வேண்டாமா?. விவசாய நிலங்கள் இருந்தால் தான் நாங்கள் சாப்பிட முடியும். இதையும் அழித்தால் நாங்கள் என்ன செய்வோம்?” என அந்த சிறுவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
January 20, 2025 1:39 PM IST