விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த படத்தின் 18 நாட்கள் வசூல் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரித்த அமரன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த அமரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அமரன் திரைப்படம் உச்சபட்ச வசூலை குவித்த படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவரது தோற்றங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின் வசூல் சாதனையை அமரன் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமரன் வெளியான 18 நாட்களில் மட்டும் உலகளவில் 294 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இதையும் படிங்க – Nayanthara | சினிமாவில் இருந்து விலகல்… காரணமான அந்த நபர்.. லைஃப்பின் மோசமான காலகட்டத்தை பகிர்ந்த நயன்தாரா!

விளம்பரம்

2019 இல் வெளிவந்த விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ. 292 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அமரன் திரைப்படம்  திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக ரூ. 350 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.



Source link