Last Updated:
Ajith | “விடாமுயற்சியுடன் விளையாடி வெற்றியை தட்டிப்பறித்துள்ளார் அஜித்” என அஜித்தின் கார் ரேஸ் வெற்றிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.
“விடாமுயற்சியுடன் விளையாடி வெற்றியை தட்டிப்பறித்துள்ளார் அஜித்” என அஜித்தின் கார் ரேஸ் வெற்றிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வீழ்ச்சி-விபத்து என எதை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் விளையாடி வெற்றியை தட்டி பறித்துள்ளார் சகோதரர் அஜித்.
பிறருக்கு உதவியாகவும் பலருக்கு உதாரணமாகவும் வாழ்வதில் அஜித்திற்கு நிகர் அவரே தான்! அனைத்திலும் ஒரு சராசரி மனிதனாக தன் சாதனைகளை சரமாரியாக அஜித் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்!” என பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்க: Vanangaan | “பாலா அவர்களே…” – வணங்கான் படத்தை கடுமையாக சாடிய லெனின் பாரதி
துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்று மூன்றாவது இடம் பிடித்தது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்தில் ‘மை டீயர் அஜித்’ என குறிப்பிட்டிருந்தார். அதேபோல கமல், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
January 13, 2025 2:04 PM IST