அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி அஜித்துக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மகிழ் திருமேனி பதவிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். ஆங்கிலத்தில் சூப்பர் ஹிட் ஆன பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி இந்த விடாமுயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டு வந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விளம்பரம்

சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்துடைய டீசர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. யாரும் எதிர்பாராத விதமாக விடாமுயற்சி படத்திற்காக அஜித் அதிரடியாக 25 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இதையும் படிங்க – ஜெயிலர் 2 படத்திற்கு தயாராகும் நெல்சன்… ஷூட்டிங் குறித்து வெளியான புதிய தகவல்

விளம்பரம்

இதையொட்டி இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘அளவில்லாத அன்பும், நன்றியும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், எங்கள் வேலைகளை ஊக்கப்படுத்தும் நபராகவும். எளிமையின் வடிவமாகவும் நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள்.

விளம்பரம்

தொடர் முயற்சியால் ஏற்படும் வெற்றி தான் இந்த விடாமுயற்சி. ஒட்டுமொத்த படக்குழுவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது. ஷூட்டிங் தொடங்கிய முதல் நாள் முதல் நிறைவு பெற்ற இந்த நாள் வரை என் மீது செலுத்திய அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் மகிழ் திருமேனி என்று கூறியுள்ளார். லைகா வெளியிட்டிருக்கும் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

விளம்பரம்

.





Source link