Last Updated:
VIjay 69 |விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை அனில் எப்படி மறுக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிக சம்பளம் தர மறுத்ததால் விலகியதாகவும் பேசப்படுகிறது.
தளபதி 69 படத்தின் கதை குறித்து மேடையில் நடிகர் விடிவி கணேஷ் பேசியதால், அதிர்ச்சியடைந்த தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி அவரது மைக்கை வாங்கிக்கொண்டு கோபத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியல்வாதியாக மாறிய பிறகு நடிக்கப் போகும் கடைசி திரைப்படம் தளபதி 69. அதன் ரீமேக் விவகாரம் பற்றி நடிகர் விடிவி கணேஷ், தெலுங்கு பட விழா ஒன்றில் பேசியதால் மீண்டும் ட்ரெண்ட்டாகி உள்ளது.
அனில் ரவிபுடி இயக்கிய “சங்கராந்திக்கு வஸ்துன்னாம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விடிவி கணேஷ், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டிய போதும், அதனை இயக்குநர் அனில் ரவிபுடி மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
விஜய்யின் கடைசிப் படத்தை இயக்க இயக்குநர்கள் வரிசையில் நிற்கும்போது, அனில் ரவிபுடி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறி ஆதங்கப்பட்டார். கணேஷின் பேச்சு, திசை மாறுவதை உணர்ந்துகொண்ட அனில் ரவிபுடி, இதுபற்றி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இதையும் வாசிக்க: Game Changer | ‘இந்தியன் 2’ படத்தின் வசூலை முறியடித்ததா ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’?
பின்னர் தனது விளக்கத்தை தந்த அனில் ரவிபுடி, விஜய்யுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தது உண்மைதான் என்றும், கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சனைகளால் அது கைகூடவில்லை என்றும் கூறினார். மேலும், விஜய் கடைசியாக நடிக்கும் படம் ரீமேக்கா இல்லையா என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து கணேஷ் பேச முயன்றதால், அவரது மைக்கை இயக்குநர் பிடுங்கிவிட்டார். அது நிகழ்ச்சியில் இருந்தவர்களை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதற்கு பயந்து அனில் ரவிபுடி மைக்கை பிடிங்கினாரோ அதற்கு ஏற்றார் போல், சமூக வலைதளங்களில் அவர் குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளன.
விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை அனில் எப்படி மறுக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிக சம்பளம் தர மறுத்ததால் விலகியதாகவும் பேசப்படுகிறது.
ஆனால், விடிவி கொடுத்த க்ளு காரணமாக பக்கா கமர்ஷியல் படம் என கணித்து வரும் ரசிகர்கள். அதேசமயம், பாலகிருஷ்ணாவின் படம் யதார்த்தத்தோடு ஒட்டாது என்ற விமர்சனங்கள் உள்ள நிலையில், அவரது ரீமேக்கில் விஜய் நடிப்பதா என்ற கருத்தும் வலம் வருகிறது.
January 13, 2025 9:31 AM IST