தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. விடுதலை படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார். கூடுதலாக, நடிகர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், அதன் 2ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்து டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன் வெளியானது.
விடுதலை 2 டிசம்பர் 20ம் தேதி உளெழுங்கிலும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படக்குழு செட் மேக்கிங் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பிற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கிராமத்தின் செட், கலை இயக்குநர் ஜாக்கி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தலில் வைரலாகி வருகிறது.
.
- First Published :