Last Updated:
பெரும்பாலும் பயணிகள் நடுப்பதி மற்றும் கடைசி பகுதி இருக்கைகளில் அமர்வதை விரும்ப மாட்டார்கள். விமான விபத்து குறித்து 35 ஆண்டுகள் நடந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் இதழ் 2015 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட்டிருந்தது.
தென்கொரியவில் நடந்த விமான விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜிஜு நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. இந்த விமானம் தலைநகர் சியோலில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியதால் வானளவிற்கு புகை கிளம்பியது.
உடனடியாக விமான நிலைய தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன்பின் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், விமான பணிப்பெண் மற்றும் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமான ஊழியர்கள் 5 பேர் உட்பட 179 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விமான பயணங்கள் பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் பயணிகள் நடுப்பதி மற்றும் கடைசி பகுதி இருக்கைகளில் அமர்வதை விரும்ப மாட்டார்கள். விமான விபத்து குறித்து 35 ஆண்டுகள் நடந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் இதழ் 2015 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட்டிருந்தது.
இதன்படி விமான விபத்துகளின்போது கடைசி பகுதியில் இருப்பவர்கள் உயிரிழந்தது மற்ற பகுதி இருக்கைகளில் இருந்தவர்களை விட குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – டொனால்டு டிரம்ப் கொடுத்த சர்ப்ரைஸ்! மகிழ்ச்சியில் இந்தியர்கள்
35 ஆண்டுகால விமான விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 32 சதவீதம் பேர் கடைசி இருக்கைகளிலும், 39 சதவீதம் பேர் நடுப்பகுதி இருக்கைகளிலும், 38 சதவீதம் பேர் முன்பகுதி இருக்கைகளிலும் அமர்ந்துள்ளனர்.
December 30, 2024 11:34 PM IST
விபத்தின்போது விமானத்தில் எந்தப் பகுதி இருக்கைகள் பாதுகாப்பானவை? 35 ஆண்டுகால ஆய்வு முடிவுகள் இதுதான்!!