ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது.
இந்த போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் இருப்பதால் இதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் ஏமாற்றம் அளித்து 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து பௌலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய 104 ரன்ளுக்கு ஆட்டம் இழக்க செய்தது.
இதை எடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.
குறிப்பாக தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிகவும் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்ததால் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் வந்தது.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு
201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கே. எல் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி சதம் அடித்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்
நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி விராட் கோலி அதிரடியாக ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். 143 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 2 சிக்சர் 8 பவுண்டரியுடன் 100 ரன்கள் எடுத்தார். 134.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 487 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது
.