தூத்துக்குடியில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளர்ப்புத் துறையில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி அக்டோபர் 13ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த 56 பயனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினை மீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், கல்லூரியில் உள்ள மீன்வளர்ப்பு பண்ணைக்குக் களப்பயணம் மேற்கொண்டு சினை மீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம் ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏலே இனி 8 இல்ல 16… அப்டேட் ஆகும் திருநெல்வேலி – எழும்பூர் வந்தே பாரத் ரயில்…
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நீநீதிச்செல்வன் பயிற்சியில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி, இப்பயிற்சியின் வாயிலாகப் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்று ஊக்குவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.