அரிசி மற்றும் கோதுமையின் விலையை கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மானியத்துடன் கூடிய பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசியின் இரண்டாம் கட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்துகிறது.
அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துவரும் மத்திய அரசு, ஒரு கிலோ பாரத் ஆட்டாவை 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாரத் அரிசியை 34 ரூபாய்க்கும் வழங்கி வருகிறது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மானிய விலையில் வழங்கப்படும் பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவற்றின் சில்லறை விற்பனையின் இரண்டாம் கட்டத்தை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மொபைல் வேன்கள், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) மற்றும் கேந்திரிய பந்தர் ஆகியவற்றைச் சேர்ந்தவை. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக, ஒரு கிலோ பாரத் ஆட்டா 30 ரூபாய் எம்ஆர்பி விலையிலும், ஒரு கிலோ பாரத் அரிசி 34 ரூபாய் எம்ஆர்பி விலையிலும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் ஜோஷி, “இந்த முயற்சியானது நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகும். பாரத் பிராண்டின் கீழ் அரிசி, ஆட்டா மற்றும் பருப்பு போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் நேரடி சில்லறை விற்பனை, நிலையான விலையை பராமரிக்க உதவுகிறது” என தெரிவித்தார்.
பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவை கேந்திரிய பந்தர், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் / பெரிய சில்லறை விற்பனையாளர்களின் கடைகள் மற்றும் மொபைல் வேன்களில் கிடைக்கும்.
இதையும் படிக்க:
70 வயதுக்கு மேற்பட்டோர் ஆயுஷ்மான் கார்டுக்கு பதிவு செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!
இரண்டாம் கட்டத்தின்போது, “பாரத் பிராண்ட் ஆட்டா மற்றும் அரிசி ஆகியவை 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், 3.69 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கோதுமையும், 2.91 லட்சம் மெட்ரிக் டன் (LMT) அரிசியும் சில்லறை விற்பனைக்குக் கிடைக்கும். முதல் கட்டத்தின்போது, சுமார் 15.20 லட்சம் மெட்ரிக் டன் (LMT) பாரத் ஆட்டா மற்றும் 14.58 லட்சம் மெட்ரிக் டன் (LMT) பாரத் அரிசி பொதுமக்களுக்கு மானிய விலையில் கிடைக்க வழி செய்யப்பட்டது.
பஞ்சாபில் நெல் கொள்முதல் குறித்த தகவலை வழங்கிய மத்திய அமைச்சர், “பஞ்சாபில் 184 லட்சம் மெட்ரிக் டன் (LMT) இலக்கு கொள்முதலை அடையவும், விவசாயிகள், மண்டிகளுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு தானியத்தையும் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என்றார்.
“நவம்பர் 4 நிலவரப்படி, பஞ்சாப் மண்டிகளுக்கு மொத்தம் 104.63 லட்சம் மெட்ரிக் டன் (LMT) நெல் வந்துள்ளது, இதில் 98.42 லட்சம் மெட்ரிக் டன் (LMT) மாநில நிறுவனங்கள் மற்றும் FCI மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கிரேடு ‘ஏ’ நெல்லுக்கு இந்திய அரசால் முடிவு செய்யப்பட்ட நெல், ஒரு குவிண்டாலுக்கு 2,320 ரூபாய்க்கு அதிகபட்ச விற்பனை விலையில் (MSP) கொள்முதல் செய்யப்படுகிறது” என்று அமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க:
PM Kisan : 19வது தவணை எப்போது? விவசாயிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்
“நடப்பு 2024-25 காரிஃப் மார்க்கெட்டிங் சீசனில், மத்திய அரசு இதுவரை கொள்முதல் செய்த மொத்த நெல்லின் விலை ரூ.20,557 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் 5.38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் அதிகபட்ச விற்பனை தொகை (MSP) வரவு வைக்கப்பட்டுள்ளது” எனவும் ஜோஷி கூறியுள்ளார்.
.