அடுத்த நொடி என்ன இருக்கிறது என்பதை அறியாத சுவாரஸ்யம் தான் வாழ்க்கை. ஒருவேளை அதனை அறிந்துகொண்டால் வாழ்வின் சுவாரஸ்யமே மறைந்துவிடும். அதேபோல், வாழ்வின் மறைந்திருக்கும் மர்மங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டால், வாழ்வில் வேடிக்கையும் இருக்காது. அதுமட்டுமின்றி சில சமயம் அதனால், வாழ்வதே கூட கடினமானதாக மாறிவிடும்.

அப்படி தான் அமெரிக்காவின் கொலராடோவில் வாழும் ஒரு தம்பதியின் வாழ்க்கை இனி வாழ்வதே கடினமானதாக மாறியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதி கடந்த 10 வருடமாக மிகவும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்துவந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

விளம்பரம்

இப்படியான மகிழான வாழ்வில் அந்த தம்பதி விளையாட்டாக ஒரு விஷயத்தை அறிவதற்கு முடிவு செய்தனர். விளையாட்டாக அவர்கள் கண்டறிந்த அந்த விஷயம் தற்போது அவர்கள் வாழ்வையே வாழ்வதற்கு கடினமானதாக மாற்றியுள்ளது.

ரத்தன் டாடா விரும்பி சாப்பிட்ட 6 உணவுகள்.!


ரத்தன் டாடா விரும்பி சாப்பிட்ட 6 உணவுகள்.!

பொதுவாக அந்நியநாடுகளில் டி.என்.ஏ. பரிசோதனை என்பது எளிதாக மேற்கொள்ளும் வகையில் இருக்கிறது. அதன் அடிப்படையில், அந்த தம்பதி தங்களின் மூதாதையர்களை பற்றி அறிந்துகொள்ள முடிவு செய்து டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்படி மேற்கொண்ட டி.என்.ஏ. பரிசோதனையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
ரத்தன் டாடாவின் கனவுகளை மெய்யாக்கிய தமிழர்.. யார் இந்த சந்திரசேகரன்?

பொதுவாக உறவு முறையில் மணம் முடிக்கும் போது அது தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிலவி வருகிறது. இதனால், டி.என்.ஏ. முடிவைக் கண்டு அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது பற்றி தங்கள் குழந்தைகளிடம் தெரிவிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கின்றனர்.

.



Source link