தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சொந்த அக்கா ஏ.ஆர். ரைஹானாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள ஜி.வி. பிரகாஷ் ‘‘வெயில்’’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது.

விளம்பரம்

சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் இணைந்து பாடல்கள் பாடியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பல காதல் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் கொடுத்தது. இந்த தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அன்வி என்ற மகள் பிறந்தார். இப்படி இருக்க, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக மே மாதம் 13 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்த முடிவு இருவருக்கும் நன்மை தரும் எனவும், ரசிகர்கள் உட்பட அனைவரும் தங்களின் முடிவுக்கு மதிப்பளிக்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

விளம்பரம்

இருவரின் விவாகரத்து செய்தி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது, மேலும் பல யூடியூப் சேனல்கள் இவர்களின் பிரிவுக்கு இதுதான் காரணம் என பல்வேறு விதமான வதந்திகளை பரப்பத்தொடங்கினர். இதனால் மனவேதனையடைந்த சைந்தவி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, Youtube சேனல்-களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது என்றும் நானும் ஜி.வி. பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு, அதே நட்புடன் பயணிப்போம்’’ என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். தற்போது சைந்தவி செய்துள்ள செயல் விவாகரத்துக்கு பிறகும் இப்படி ஒரு மனசா என பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

விவாகரத்துக்கு பிறகு ஜி.வி. பிரகாஷுக்காக சைந்தவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “டிசம்பர் 7ம் தேதி ஜி.வி. பிரகாஷ் சாரின் லைவ் இன் கான்செர்ட் ‘Celebration of Life’ மலேசியாவில் உள்ள ஹோக்கி நேஷனல் ஸ்டேடியமில் நடக்கவுள்ளது. இந்த கான்செர்ட்டில் நான் உங்களை சந்திக்கப்போகிறேன். ஆடல், பாடல், கொண்டாட்டம் என அனைத்தும் இருக்கப்போகும் இந்த கான்செர்ட் டிக்கெட்டுகளை விரைவாக புக் செய்யுங்கள்.. உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிச்சயம் வாருங்கள் மலேசியாவில் சந்திப்போம்” என்று கூறியிருந்தார். திருமண உறவில் இருந்து இருவரும் பிரிந்த போதிலும் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி பங்கேற்று பாடவிருப்பது இணையத்தில் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

விளம்பரம்

.





Source link