அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நியூயார்க் மாடல் அழகி சப்ரினா. 27 வயதான இவர், 34 வயதான பஜ்திம் கிராஸ்னிகி என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். இருவரும் புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர். திருமண வாழ்க்கை இனிமையாக கடந்த வேளையில், மாடல் அழகியான சப்ரினா சில ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது, கணவர் கிராஸ்னிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை தட்டிக் கேட்டதால் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், சப்ரினாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு கணவர் சென்றுள்ளார்.
இது, சப்ரினாவுக்கு தெரிய வந்ததும் நண்பர்கள் மூலம் சமாதான பேச்சு நடத்தியுள்ளார். ஆனால், கிராஸ்னிகி தனது முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. இதனால், கடும் கோபம் கொண்ட சப்ரினா, கணவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், துப்பாக்கியுடன் சென்ற சப்ரினா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் கிராஸ்னிக்கை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். மார்பில் 5 குண்டுகள் பாய்ந்ததில் படுக்கையிலேயே கிராஸ்னிக் பரிதாபமாக உயிரிந்தார்.
அதே கோபத்தில் சப்ரினாவும், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றினர். பின்னர், இரட்டை மரணம் தொடர்பாக வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read :
மூன்றாம் உலகப்போர் நடந்தால் நிலைமை என்னவாகும்? இணையத்தில் வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு
மாடல் அழகி ஒருவர், தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
.