யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் இன்றைய நாட்களில் பலரும் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அளவினர் நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர். அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த சோஃபி ரெயின் என்பவர், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.367 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவர் சம்பாதித்துள்ளார். எப்படி தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சோஃபி ரெயின் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். 17 வயதிலேயே உணவகத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு வேலைக்குச் சேர்ந்த சோஃபி ரெயின், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் OnlyFans என்ற சமூகவலைதளப் பக்கத்தில் தனது வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கினார்.
ஆபாசம் கலந்த அவரது வீடியோக்கள் சில நாட்களிலேயே பேசுபொருளாக மாறி, ரசிகர்களை குவிக்கத் தொடங்கினார். OnlyFans சமூகவலைதளத்தில் ஓராண்டை நிறைவு செய்துள்ள சோஃபி ரெயின், தனது ஓராண்டு வருமானத்தை பதிவிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க:
கிரிக்கெட் வருமானம்: நம்பர் 1 இடத்தை இழந்த கோலி – முந்தியது யார் தெரியுமா?
ஒரு வருடத்தில் சம்பாதித்த இந்த பணத்தை வைத்து, தனது தந்தையின் முழு கடனையும் செலுத்தி விட்டதாக கூறியுள்ள சோஃபி ரெயின், தனது வருமானத்தின் 70 சதவீதத் தொகையை பல்வேறு வகைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது 3 கார்கள் மற்றும் ஏராளமான ஆடம்பர உடைகளை வைத்துள்ள சோஃபி ரெயினுக்கு OnlyFans பக்கத்தில் 11 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பாலோயர்களும், X பக்கத்தில் 2.5 மில்லியனுக்கு அதிகமான பாலோயர்களும் இருக்கின்றனர்.
.