வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறது.

தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வெங்காய இறக்குமதிக்கு தீர்மானம் appeared first on Daily Ceylon.



Source link