உங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ சிம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜியோ சமீபத்தில் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக ரூ.101 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மலிவான திட்டத்தில், நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவை எந்த லிமிட்டும் இல்லாமல் யூசர்களுக்கு வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிறுவனமானது தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை மூன்று மாதங்களுக்கு முன்பு உயர்த்தியது. ஜியோவின் கட்டணத்தில் சராசரியாக 15 சதவிகிதம் அதிகரித்த பிறகு, பல யூசர்கள் BSNLக்கு மாறத் தொடங்கினர். அதன் பின்னர், ஏற்கனவே உள்ள சில திட்டங்களில் மாற்றங்களை செய்த ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஜியோவின் இந்த புதிய திட்டத்தின் விலை குறைவாக உள்ளது மற்றும் இது அதிக நன்மைகளையும் யூசர்களுக்கு வழங்குகிறது. ஜியோவின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

விளம்பரம்

நாடு முழுவதும் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பெரும்பாலான பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி நெட்வொர்க் வசதியை வழங்கும் முதல் நிறுவனம் இதுவாகும். கடந்த சில நாட்களில் ஜியோ பல மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஜியோ திட்டங்களின் ஆஃபர் ஆனது தீபாவளிக்கு முன்பே தொடங்கியது. அதாவது, ஜியோ ரூ.101 மலிவு விலைக்கான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. அதிக டேட்டாவிற்காக கூடுதல் பணம் செலுத்த விரும்பாத யூசர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
2030-ல் நீங்கள் எவ்வளவு மொபைல் டேட்டாவை பயன்படுத்துவீர்கள் தெரியுமா?

இந்த மேம்படுத்தப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட்ஸ் உடன் வருகிறது. இது ஒரு டேட்டா பேக் ஆகும். இந்த டேட்டா பேக்கிற்கு “ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் + 6GB” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை வாங்க ரூ.101 மட்டுமே செலவழித்தால் போதும். இதை அடிப்படை திட்டத்துடன் பயன்படுத்தப்படலாம். அதாவது, ஜியோவின் ரூ.101 திட்டத்தை தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களுடனும், தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 அல்லது 56 நாட்கள் திட்டங்களுடனும் சுமார் 2 மாதங்கள் செல்லுபடியாகும். இந்த ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளானை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும்போது அன்லிமிடெட் 5G டேட்டாவின் பலன் கிடைக்கும். மேலும் 6 ஜிபி 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

விளம்பரம்

.



Source link