வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. விடுதலை படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார். அவரின் திறமையான நடிப்பு கதைக்கு இன்னும் ஆழத்தையும் தீவிரத்தையும் சேர்த்துள்ளது. கூடுதலாக, நடிகர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், அதன் 2ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்து டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது. எப்போதோ வெளியாகவிருந்த விடுதலை 2 படம் கடுமையான காடுகளில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டதால் தாமதமானது, இதனால் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. ரசிகர்கள் எப்போது ரிலீசாகும் என்று காத்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
The battle for justice continues in #ViduthalaiPart2. Get ready for an intense ride. Film by #VetriMaaran. Only 7 days to go
An @ilaiyaraaja Musical #ViduthalaiPart2FromDec20@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4… pic.twitter.com/qvfYNiexC3
— RS Infotainment (@rsinfotainment) December 13, 2024
அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 டிசம்பர் 20ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரசிகர்கள் படத்தை திரையில் காண உச்சகட்ட ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
.