Last Updated:
ரெட்மி நோட் 14 மாடல்கள் AMOLED டிஸ்ப்ளேக்களைப் பெறுகின்றன, மேலும் கண்கவர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளன.
ரெட்மி ஸ்மார்ட்போன் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்திருந்தாலும் இதற்கென ஒரு வாடிக்கையாளர்கள் பட்டாளம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ரெட்மி நோட் 14 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி நோட் 14 மாடல்கள் MediaTek Dimensity மற்றும் ஸ்னாப்டிராகன் என பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.
ரெட்மி நோட் 14 ஆனது அடிப்படை 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB என மூன்று வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. விலை முறையே 6GB + 128GB மாடல் ரூ.18,999 இலிருந்து தொடங்குகிறது, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மாடல்களுக்கு ரூ.19,999 மற்றும் ரூ.21,999 என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
இதையும் படிக்க: குறைந்த விலை, சூப்பர் கேமிரா, பெஸ்ட் பேட்டரி… அசத்தும் Moto-வின் புதிய மாடல்
ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல்களைப் பொறுத்தவரை, 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 24,999 என விலை தொடங்குகிறது. மேலும் இந்தியாவில் ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆரம்ப விலை 8GB + 128GB மாடலுக்கு ரூ.30,999 ஆகும். ரெட்மி நோட் 14 சீரிஸ் விற்பனை டிசம்பர் 13 முதல் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ரெட்மி நோட் 14 சீரிஸ் அம்சங்கள்:
ரெட்மி நோட் 14 மாடல்கள் AMOLED டிஸ்ப்ளேக்களைப் பெறுகின்றன, மேலும் கண்கவர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளன. ப்ரோ மாடல்கள் 120Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட்டுடன் கூடிய curved டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 போனானது 8GB RAM உடன் MediaTek Dimensity 7025 Ultra மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ போனானது Dimensity 7300 Ultra சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆனது 12GB RAM மற்றும் 512GB சேமிப்பகத்துடன் கூடிய Snapdragon 7s Gen 3 சிப்செட்டைப் பயன்படுத்துகிறது.
ரெட்மி நோட் 14 -க்கு 2 வருடங்கள் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்கள் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்றும், ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு 3 வருடங்கள் ஓஎஸ் அப்டேட், 4 வருடங்கள் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும் என்றும் Xiaomi கூறுகிறது. தற்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் HyperOS பதிப்பு Android 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டது.
ப்ரோ+ மாடலில் 50MP முதன்மை OIS சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு லென்ஸுடன் இணைக்கப்பட்ட டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. ரெட்மி நோட் 14 இல் 45W சார்ஜிங் கொண்ட 5110mAh பேட்டரியைப் பெறுவீர்கள். ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆனது 90W சார்ஜிங் ஆதரவைப் பெறும் பெரிய 6,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
December 14, 2024 9:37 PM IST