வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கல்குடா மாஞ்சோலை பிரதேச மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சீ நியாஸ்தீனின் நிதியுதவியுடன் சமைத்த உணவுப்பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.   இதன்போது பிரதேச இளைஞர்கள், மற்றும் பிரதேசவாசிகள் தங்களது பங்களிப்பை வழங்கினார்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மற்றும் நியாஸ்தீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையியிட்டனர். இதன்போது கவத்தமுனை அனர்த்தமுகாமுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை இவர்கள் கேட்டறிந்தார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சமைத்த உணவு வழங்கி வைப்பு appeared first on Thinakaran.



Source link